Tuesday, March 16, 2010

ஞானம் !

நீ
வேண்டுமானாலும்
உறங்கி கொள் .
உன்னுள்
இருக்கும்
ஞானத்தை
உறங்க விடாதே
அது
விழித்திருக்கட்டும் !

க(வ)லை !

கவலை
என்பது
ஒரு
வலை.
அதை
களைவது
என்பது
ஒரு
கலை !

பறவை / விமானம்

ஈரறிவு
பறவை
தானாக
பறக்கிறது.
அதற்கு
ஆறாயிரம்
கொடுக்கிறான்
ஆறறிவு
மனிதன்!

சிந்தனையாளன்..

சிந்திப்பவன் நடை
சிறு நடையாகத்தான்
இருக்கும் .
அவன்
எழுத்தின் நடையோ
மின்னல்
வேகம்தான்!

நினைத்தது..!

நினைத்தது
நடக்கவில்லை
என்று
கவலைப்படாதே .
அந்த
"நடக்கவில்லை"
என்பது
இறைவன்
நினைத்தது!

கூலி!

முயற்சித்தேன்
முயற்சித்தேன்
என்
மெய் வருந்த ...
கூலி என்று ?
என் வயதோ
எழுபது இன்று !

கோடி கோடி!

பண்ண வேண்டும்
பத்து கோடி என்று
படித்தேன்
பல புத்தகங்கள் .
கோடி கோடி என்று
ஓடி ஓடி
உழைத்தேன் .
கிடைத்தது கோடி !
ஆஹா !
எத்தனை அனுபவங்கள் !